தொடர்-தொகுப்பு நிகழ்வு செப்டம்பர் 2024
தொடர்-தொகுப்பு நிகழ்வு செப்டம்பர் 2024. இடம்: ஏற்காடு நீண்ட நாடகள் பிறகு தமிழ் விக்கிப்பீடிய அன்பர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. முதல் நாள் இரவே ஏற்காட்டிலுள்ள விடுதியில் சென்றடைந்தேன். விடுதி அறையில் நிவாஸுடன் தங்கியிருந்தேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடினேன். சிஐஎஸ் இன் பணி பற்றியும், விக்கிச் சமூக நிகழ்வுகள் பற்றியும், தற்பொழுது திட்டமிடப்படும் இந்திய அளவிலான விக்கி மாநாடு பற்றியும் அறிந்துகொண்டேன். மிகவும் சுவாரஸ்யமான உரையாடலாக இருந்தது. கூடலில் நான் உரையாடிய போது | புகைப்படம் ஶ்ரீதர் | CC BY-SA 4.0 அடுத்த நாளில் நிகழ்ச்சி தொடங்கியது. கூகுள் இயந்திரம் மூலம் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரைகளைச் சரிசெய்ய எப்படி செய்யலாம் என்பதையும், எந்தக் கட்டுரைகளை யார் செய்வது போன்ற உரையாடல்கள் நடந்தது. பின்பு ஒவ்வொருவரும் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பித்தோம். இடையிடையே மற்ற பயனர்களுக்குச் சந்தேகம் வரும்பொழுது அவர்களுடன் உரையாடி சந்தேகங்களைத் தீர்த்துவைத்தேன். தமிழ் விக்கிப்பீடியாவின...